கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் வரவேற்பு
- நமது நிருபர் -
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். இன்று (நவம்பர் 03) ரூ.1,100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் கோவை வந்தார்.
விமான நிலையத்தில், முதல்வர் விஜயை அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன், விக்னேஷ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வர் திருப்பூர் மாவட்டம் வழியாக ஈரோடு மாவட்டத்துக்கு சாலை வழியாக பயணத்தை துவங்கினார்.
முக்கிய இடங்களில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
களத்தில் தினமலர்!
கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!
மக்கள்பணி செய்யத்தான் மக்கள் அமைச்சர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்கள் ஆன பிறகு இப்படி வொவொருமுறை முதல்வர் வொவொரு ஊருக்கு செல்லும்போதும் அவரை வரவேற்க கிளம்பிவிட்டால், மக்கள் பணியை யார் செய்வது?
தற்குறி வாக்காளர்கள் இருக்கும் வரை ஒரு கவலையில்லை ....
சொந்த லாபத்துக்காக ஊரான் வீட்டு நெய்ல தனி விமானத்தில் சென்று தேர்தல் பிரசாரம் ???
முதல்வர் நேற்று புதுக்கோட்டை சென்றார். அங்கிருந்தே புதுக்கோட்டை அல்லது திருச்சியில் இரவு தங்கி இன்று ஈரோடு சென்றிருக்கலாமே? அதுதானே தொலைவு கம்மி. ஒரு நாள் இரவு பனையூரில் தங்க சென்னை திரும்பி மீண்டும் இன்று தனி விமானப் பயணமா? இவற்றால் ஏற்படும் அரசின்கூடுதல்செலவு, சென்னை போலீசாரின் இன்றையதேவையற்ற தனி மனிதஉழைப்பு இவற்றை மாண்புமிகு முதல்வர் தவிர்த்திருக்கலாமே?
சரிதான் - - நேத்து ஒரு பத்து பதினைந்து கோடி ரூபா செலவு , , இன்னிக்கு ஒரு பத்து பதினைந்து கோடி ரூபா செலவு , ,
டெய்லி, பத்து கோடி ரூபா தண்ட செலவு பண்ணினா , , மாசம் 300 - 400 கோடி ரூபா ,
செலவு பண்ணி ஒரு சிஎம் ஆட்சியில் இருந்தாலும் ,
மக்களுக்கு அரிசி விலை பத்து பைசா கூட குறையவில்லை - கரெண்ட் கட்டணம் - பால் விலை , பத்து பைசா கூட குறையவில்லை,
தேர்தல் நடக்கிற இடம் பார்த்து போகிறார் முதல்வர் வாழ்க சனநாயகம் வாழ்க மக்கள் வாழ்க தமிழ்நாடு
திமுக தீய சக்தி
தவெக பயங்கரமான தீய சக்தி
ஒரு விஜய் படத்தில் கோவெர்னர் வருவத்திக்காக ட்ராபிக்காய் நிறுத்தி விடுவார்கள்
டூர் போய் ரீல்ஸ் போடுவதை நிறுத்திவிட்டு, அரிசி,மளிகை, காய்கறிகள்,விலை மிகமிக கடுமையாக உயர்ந்துள்ளது, காரணம் பதுக்கலா, பற்றாக்குறையா என கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருபக்கம் பிள்ளைகள் காணமல் போவது, கொலைகள், கொள்ளைகளை தடுக்க 6 மாதம் ஆகி இன்னும் நடவடிக்கை இல்லை
இவர் தனி விமானத்தில் போவதற்கான செலவில் மற்றொரு நலத்திட்டத்தை செய்து விடலாம். மாதாமாதம் கடன் வாங்கி செலவு செய்யும்
தமிழகத்தின் முதல்வர் போக்குவரத்துக்காக பல கோடிகளை செலவு செய்வது பொறுப்பற்ற செயலாகும்.
முதல்வர் வருகையை ஒட்டி தீபாவளி நேரத்தில் கடைகளை அடைத்து அவர்களின் வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.மேலும்
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
-
தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
-
தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்