அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: பெரியசிறுவத்துார் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரவீணா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பன் சிறப்புரையாற்றினர்.

தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரி ராஜபிரியா வரவேற்றார். இதில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டர் கனகவல்லி பாலியல் குற்ற தடுப்புக்கு காவல் துறையை அணுகுவது குறித்து எடுத்துரைத்தார்.

போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குறும்படம் ஒளிபரப்பப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement