வீட்டில் பணிக்கு சேர்ந்த 2ம் நாள் 10 பவுன் திருடிய பெண் சிக்கினார்

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் மனோகரன், 73. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், 93 வயது தாயை கவனித்துக்கொள்ள, சென்னையை சேர்ந்த, தனியார் ஏஜன்சி மூலம், மஞ்சுளா என்ற பெண்ணை, கடந்த, 5ல் நியமித்துள்ளார். அக்., 7ல், அவரது தந்தை இறந்துவிட்டதாக கூறி, மஞ்சுளா சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த, 10 பவுன் நகைகள், 50,000 ரூபாயை காணவில்லை. இதுகுறித்து மனோகரன் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், வீட்டு வேலைக்கு சேர்ந்து, 2 நாளில் ஊருக்கு சென்ற, வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி, இந்திரா நகரை சேர்ந்த மஞ்சுளா, 41, திருடியது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.

Advertisement