போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: கைது 3

திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி.டெப்போ எதிரே உள்ள முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் 8.1 கிராம் எடையுள்ள போலி தங்க மோதிரங்களை அடகு வைக்க முயன்ற 3 பேரை மேலாளர் பாலமணி 46, பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கே.டி.சி.,நகரைச் சேர்ந்த செந்தில்வேல் 36, தூத்துக்குடி பண்டாரப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் 30, வெற்றிவேல் 30, என தெரியவந்தது. பாலமணி அளித்த புகாரின்பேரில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement