தீபாவளி பலகாரத்தின் தரத்தில் சந்தேகமா? புகார் எண்ணை வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை

தீபாவளி பண்டிகை வரும் நிலையில் பலகாரங்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு என வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு;

* தீபாவளி பலகாரங்களை வியாபார ரீதியாக தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மற்றும் தற்காலிக சீட்டு நடத்தி பலகாரம் செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை தற்காலிக உரிமை அல்லது முறையான பதிவுச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

* ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது. எண்ணெய் கொதிநிலையில் இருக்கும் போது புதிய சமையல் எண்ணெய்யை அதனுடன் கலக்கக்கூடாது.

* நல்ல தரமான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட செயற்கைநிறமிகளை மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் பயன்படுத்த வேண்டும்.

* பலகாரங்களை பேக்கிங் செய்யும் பெட்டிளின் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை நுகர்வோருக்கு தெரியும்வண்ணம் குறிப்பிட வேண்டும்.

* பலகாரங்கள் தயாரிக்கப்படும் மற்றும் இருப்பு வைக்கப்படும் இடங்கள், ஈக்கள், பூச்சிகள், கிருமித்தொற்று இல்லாத தூய்மையான சூழலில் இருக்க வேண்டும்.

* தரம் குறைந்த உணவு பொருட்கள், விதிகளை மீறி செயல்படும் கடைகளை அறிந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Advertisement