மாநில அளவில் தட்டு எறிதல் போட்டி சங்கராபுரம் நியூ பவர் பள்ளி சாதனை
சங்கராபுரம்: சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் நடந்த தட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தமிழ்நாடு அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் மதுரையில் நடந்தது. போட்டியில் சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி நித்தீஸ்வரி தட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவி நித்தீஸ்வரியை நியூ பவர் மெட்ரிக் பள்ளி நிர்வாகி துரை தாகப்பிள்ளை, சேர்மன் மணிவண்ணன், பொருளாளர் ரோஜாரமணி, தலைவர் பழனியம்மாள் மற்றும் பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement