ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கம் ரூ.4.50 கோடி ஒப்பந்தம் ரத்து

கிண்டி: கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கப் பணிக்காக, 4.50 கோடி ரூபாயில் விடப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, அடையாறு மண்டலம், 172வது வார்டில் அமைந்துள்ளது. 40 அடி அகலம் கொண்ட இந்தச் சாலையை 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய, கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், ஒரு பக்க சாலைப் பணிகள் முடிக்கப்பட்டன. மறுபக்கத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட கட்டடங்களை இடித்துவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்காக, 150 மீட்டர் நீளம், 22 அடி அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்ய 4.50 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்பட்டது. நிர்வாகக் குளறுபடி காரணமாக, அந்த ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. மறு ஒப்பந்தம் கோரி, சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement