விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுங்கள்: இ.கம்யூ.,
விழுப்புரம்: ‘‘அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்,’’ என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ செயலர் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, விழுப்புரத்தில் இ.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை காலமாக இருந்தாலும், தொடர்ந்து பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போவதால், மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் தடுக்க தவறிவிட்டது கண்டனத்துக்கு உரியது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்களின் விலை விலை உயர்வை, மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தையும் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சி.எம்.டி.ஏ.,வில் ஆய்வு செய்ய அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., நியமனம்
-
ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கம் ரூ.4.50 கோடி ஒப்பந்தம் ரத்து
-
எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
-
6ம் தேதி அஞ்சல் குறைதீர்வு முகாம்
-
மழை பெய்யாமலேயே சாலையில் வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
-
அரசு அலுவலக வளாகத்தில் உள்ள மசூதியை அகற்றுவது கட்டாயம்: டில்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்