சி.எம்.டி.ஏ.,வில் ஆய்வு செய்ய அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., நியமனம்

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய, கால்நடை துறை செயலர் அனுஜார்ஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

சி.எம்.டி.ஏ.,வில் பணியாளர் நியமனம், நிர்வாகம் தொடர்பான நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும்.

குறிப்பாக, சி.எம்.டி.ஏ.,வில் பணியாளர் நிர்வாகம் தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், தலைமை செயலக துறைகள் வாரியாக, பணியாளர் நிர்வாகம் தொடர்பாக ஆய்வு செய்ய உயரதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்த வகையில், சி.எம்.டி.ஏ.,வில் ஆய்வு செய்ய, கால்நடை துறை செயலர் அனுஜார்ஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், நவ., 5 ல், சி.எம்.டி.ஏ.,வில் அனுஜார்ஜ் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அனைத்து கோப்புகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement