எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியர் மட்டுமின்றி ரயில்களிலும் மோப்பநாய் உதவியுடன் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், வைத்து இருப்பவர்கள், பதுக்குபவர்கள் என, அனைவரையும் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாலானோர் வெளிமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலமாகவே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரயில்வே போலீசாருடன் இணைந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணியர்கள் மட்டுமின்றி ரயில்களிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement