நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா

ஆத்துார்: ஆத்துார், துலுக்கனுாரை சேர்ந்த விவசாயி சரவணகுமார், 38. இவர் விவசாய நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, 2021ல், ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். நில அளவையர், அளவீடு செய்ய வராமல் அலைக்கழித்து வந்தார். இதனால் விவசாயி, நிலத்தை அளவிடக்கோரி, கடந்த பிப்ரவரியில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், நில அளவீடு செய்துதர உத்தரவிட்டது. ஆனாலும் அளவீடு செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயி, 6 ஆண்டாக அலைக்கழித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தவில்லை எனக்கூறி, நேற்று, ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகனம் முன், கண்களில் கறுப்பு துணியை கட்டிக்கொண்டு, தர்ணாவில் ஈடுபட்டார்.
வருவாய்த்துறையினர், பேச்சு நடத்தி, நில அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். பின் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.

Advertisement