அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற வந்த நோயாளியிடம், தனியார் மருத்துவமனை கட்டணம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தனியார் மருத்துவமனையில், தன் கணவருக்கு சிகிச்சை பெற வந்த நிலையில் ரத்தப் பரிசோதனை, மஞ்சள் காமாலை பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த முடியாமல், நோயாளியின் மனைவி, மருத்துவமனை ஊழியர்களிடம் கண்ணீருடன் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

காப்பீடு இல்லாமல் டயாலிசிஸ் செய்தால், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் இதுகுறித்து விசாரிப்பதாகவும், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement