ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த ரயில் விபத்தில் 68 பேர் பலியானதற்கு பொறுப்பேற்று போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இரண்டு பயணியர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 68 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்பெயினில் இந்த ஆண்டில் நடக்கும் இரண்டாவது பெரிய ரயில் விபத்து இதுவாகும்.
இந்த விபத்துக்கு பொறுப்பேற்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கர் புயென்டே ராஜினாமா செய்யக் கோரி, அவரது அலுவலகம் முன், ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், அவரை மரணத்தின் அமைச்சர் என்று விமர்சித்தனர். அப்போது அவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
செவில்லே நகரில் உள்ள பாத்ரே பியோ பல்மேட் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்