ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
என்விடியாவின் அதிநவீன சிப்கள் குறித்து தெரிந்து கொள்ள அந்நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹூவாங்கை சீனா உளவு பார்த்துள்ளது.
பெண் தொழிலதிபர் ஒருவர் வாயிலாக இந்த முயற்சியில் சீனா ஈடுபட்டது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு தரவு மையம் ஒன்று செயல்படுகிறது. இதன் தலைவரான சீனாவை சேர்ந்த அலிஸ் ஹூவாங், அவரை உளவு பார்த்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக இருந்த காலத்தில் என்விடியா ஏஐசிப்களை வழங்குவதற்கான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சீனா உளவு பார்த்தது. ஆனால், இந்த தகவல் எதுவும் ஜென்சன் ஹூவாங்கிற்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது பற்றி ஓராண்டுக்கு முன்னரே அதிபர் டிரம்ப்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு, என்விடியா வணிகம் சீர்குலைவு, சீனா உடனான வர்த்தக உறவு பாதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு டிரம்ப் நடவடிக்கை எடுக்க தயங்கியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது.