பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை

கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி, சுபேதார்மேடு அருகே அமைந்துள்ள, 'பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி'யின், 10ம் வகுப்பு மாணவி அதிகா ஆனந்தவன், 15. மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர், கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான, 1,500 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம், 3,000 மீ., ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பிடம் பெற்றார்.மாணவியின் சாதனையை பாராட்டி, பள்ளி நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவி அதிகா எதிர்காலத்திலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினர்.
மேலும் அவர்கள், 'கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதில், 'பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளி' தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. மாணவி அதிகாவின் வெற்றி, மற்ற மாணவர்களும் விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க ஊக்கமாக அமையும். மாணவியின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்க்கின்றன' என்றனர்.

Advertisement