பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
சென்னை: 'பால் விலையை, லிட்டருக்கு, 5 ரூபாய் உயர்த்த வேண்டும்' என, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
ஆவின் வாயிலாக தினமும், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும், 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்ச் நிற, 500 மி.லி., பால் பாக்கெட் 30 ரூபாய்க்கும், பச்சை மற்றும் ஊதா நிற பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், நீல நிற பால் பாக்கெட், 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
திணறுகின்றனர்
ஒரு பால் பாக்கெட் வாயிலாக, ஆவின் பாலகங்கள் நடத்துவோருக்கு, 75 காசுகள் மட்டுமே கமிஷனாக கிடைக்கிறது. தற்போதைய சூழலில், மின்கட்டணம், கடை வாடகை செலுத்தி, பாலகங்களை நடத்த முடியாமல் பலரும் திணறுகின்றனர். இதனால், புதிது புதிதாக ஆவின் பாலகங்கள் திறக்கப்படுவதும், சில மாதங்கள் கழித்து மூடப்படுவதும், பல மாவட்டங்களில் தொடர் கதையாக உள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை, 75 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றன. தனியாரை விட குறைந்த விலையில், ஆவின் பால் விற்கப்படுவதால், ஹோட்டல்கள், டீக்கடைகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு, அதிகளவில் வாங்கப்படுகிறது. இதனால், பாலகங்களில் நுகர்வோருக்கு பால் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே, பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, ஆவின் வட்டாரத்தில் கூறியதாவது:
பால் குறைந்த விலையில் விற்கப்படுவதால், விவசாயிகள், ஆவின் நிர்வாகம், பாலகங்களை நடத்துவோர், சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி விட்டது. இதனால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அத்துடன், ஆவின் நிர்வாகம் மற்றும் பாலகங்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் விலையை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
ரூ 8 உயர்வு
இதனால், லிட்டருக்கு நான்கு ரூபாய் ஆவினுக்கும், ஒரு ரூபாய் பாலகங்களுக்கும் கிடைக்கும். அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும். சமீபத்தில் கர்நாடகா அரசு லிட்டருக்கு எட்டு ரூபாய் வரை, பால் விலையை உயர்த்தி உள்ளது. அதைவிட குறைவாகவே, விலை உயர்வை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஆவின் வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
36 சொகுசு வீடுகள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி; விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு
-
சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழக/வு நீரால் ...ஆபத்து! கிராம சபையில் மக்கள் கேள்வியால் திணறிய அதிகாரிகள்
-
குலசையில் மார்ச்சில் முதல் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை
-
தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்
-
ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா