டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' தேர்வில் 2,646 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வில், 2,646 தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வுக்கு தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 17,420 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 56 தேர்வு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இதில், 2,646 பேர், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 14,774 பேர் தேர்வெழுதினர். தேர்வுகளை கண்காணிக்க, ஆர்.டி.ஓ., தாசில்தார்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தணிக்கையில் ஈடுபட்டனர்

Advertisement