தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது.
இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்டவைகளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் களைகளை அகற்றும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்து வருகின்றனர். ஏற்கனவே, நாற்று வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் மழையின்றி கடும் வெயில் அடித்ததால் நெல் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். சமீபத்தில் பெய்த தொடர்மழையால், ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், நிலத்தை டிராக்டரை கொண்டு உழுது பண்படுத்தி, நாற்று பறித்து நெல் நடவு பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், அரூர் மற்றும் மாம்பட்டி, கொங்கவேம்பு, ஈச்சம்பாடி, சோரியம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:40 மணி முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் வெள்ளம் தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும்
-
36 சொகுசு வீடுகள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி; விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு
-
சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழக/வு நீரால் ...ஆபத்து! கிராம சபையில் மக்கள் கேள்வியால் திணறிய அதிகாரிகள்
-
குலசையில் மார்ச்சில் முதல் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
-
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை
-
ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா