ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பி.கோடுபட்டி ஐயனாரப்பன், வீர காரர் கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பென்னாகரம் அருகே உள்ள பி.கோடுபட்டி பகுதியில் மிகவும் பழமையான ஐயனாரப்பன், உப தெய்வங்கள் கோவில் உள்ளது. கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைத்தனர்.
கடந்த மாதம், 25ல் கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலையில், 3ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு கோவில் மூலவர் மற்றும் கோபுர கலசங்களுக்கு வேத விற்பன்னர் சுந்தரராஜன் சிவம் தலைமையிலான குழுவினர் புனித நீர் ஊற்றி
கும்பாபிஷேகம் நடத்தினர். ஐயனாரப்பன் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பென்னாகரம், பி.கோடுபட்டி, தாசம்பட்டி, பவளந்துார், கருங்கல்மேடு, இரங்காடு, சேலம் மாவட்டம் மேச்சேரி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர்.

Advertisement