சூடானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
கார்தூம்: சூடானின் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. அப்போது, திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
26ம் தேதி மாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று 'எமர்ஜென்சி லாயர்ஸ்' எனும் வன்முறை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள அக்குழு, தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில், 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்துடன் தங்களை இணைக்க அதிவிரைவு ஆதரவு படையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 2023ல் இருந்து இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது.
மேலும்
-
பல் மருத்துவ சங்க செயலர் தேர்வு
-
கரையைத் தொட்டது முரசு புயல்: ஆந்திராவில் கொட்டுகிறது கனமழை
-
வீட்டின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப், வெள்ளி திருட்டு
-
ரயில்களில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா 6 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
-
மொபைல் திருடிய வழக்கில் 2 பேர் கைது
-
சாலை வசதி செய்து தரக்கோரி மக்கள் மறியல் போராட்டம்