பல் மருத்துவ சங்க செயலர் தேர்வு
சேலம்; இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயலராக, மூன்றாம் முறையாக டாக்டர்
செந்தாமரை கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளைக்கு, தலைவர், துணைத்தலைவர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் தேர்தல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாநில செயலர் தேர்வு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
அனைத்து மாநில நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, டாக்டர் சிவகுமார் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.பலரும் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை மற்றும் நிர்வாகக்குழு கூட்டம், நேற்று சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
வேட்பு மனு பரிசீலனை முடிவில், மாநில செயலராக டாக்டர் செந்தாமரை கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. மாநில தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் டிச., 5ல் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 3வது முறையாக மாநில செயலராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் செந்தாமரை கண்ணனுக்கு, நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்