வீட்டின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப், வெள்ளி திருட்டு

சேலம்; சேலம், சேர்மன் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் வக்கீல் ராமகிருஷ்ணன். இவர் வேலை நிமித்தமாக சென்னை சென்றிருந்தார். வக்கீல் உதவியாளர் விஜயன், வீட்டை பராமரித்து
வந்தார்.

கடந்த 31ல் விஜயன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மறுநாள் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின், அதே பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ணனின் சகோதரர் சங்கரன், 65, மற்றும் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். சங்கரன் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த, 45 ஆயிரம் ரூபாய், நான்கு வெள்ளி விளக்கு, லேப்டாப் மற்றும் மொபைல்போன் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இது குறித்து அம்மாபேட்டை போலீசார், நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement