கரையைத் தொட்டது முரசு புயல்: ஆந்திராவில் கொட்டுகிறது கனமழை
- நமது நிருபர் -
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‛முரசு' புயல் கரையை கடக்கும் நிகழ்வு தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியான ஒங்கோல் அருகே நள்ளிரவில் துவங்கி, கரையை கடந்தது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
புயலின் முன்பகுதியில் அடர்ந்து காணப்படும் மேகக்கூட்டங்கள் பெருமளவில் நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளன. புயலின் மையப் பகுதியான 'கண்' பகுதி தற்போது கரையைக் கடக்கத் துவங்கியுள்ளது.
புயலின் நகர்வு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் கரையை நெருங்கியுள்ளதால் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement