சாலை வசதி செய்து தரக்கோரி மக்கள் மறியல் போராட்டம்
சேலம்: சேலம் - இளம்பிள்ளை சாலையில், செம்மண் திட்டு பகுதியில் இருந்து கஞ்சமலை அடிவாரம் வரை செல்லும் ஊராட்சி சாலை, 14 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, பெரியவர்கள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூசநாயக்கனுார், மேல்காடு பகுதி மக்கள் நேற்று காலை, 8:30 மணிமுதல் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த இரும்பாலை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அதில், கட்டாயம் விரைவில் தார்ச்சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்