மின்சார கட்டமைப்பை மேம்படுத்த எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி: தட்டஞ்சாவடி தொகுதியில் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த அசோக் ஆனந்தன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மின்துறையின் கண்காணிப்புப் பொறியாளர், மின்துறைத் தலைவர் களியமுதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சேதமடைந்த மின் கம்பங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைப்பது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது, குறித்து விவாதிக்கப்பட்டது.
தொகுதியில் மின்சார தேவையை கருத்தில் கொண்டு, மின்சார வினியோகத்தை மேம்படுத்துவது, தேவையான இடங்களில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைப்பது, மின்சார வினியோகத்தில், ஏற்படும் தடைகள், மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும்
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
-
2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்