பள்ளி மாணவர்கள் மீண்டும் போராட்டம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்த நான்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு, பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் ஆசிரியர்களின் இடமாற்றம் படிப்பை பாதிக்கும் என்பதால் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படமாட்டார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் ஆசிரியர்கள் நான்கு பேரும் வேறு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
மேலும்
-
மாநகராட்சியில் ரூ.211.83 கோடியில் பாதாள சாக்கடை: கமிஷனர் ஆய்வு
-
சமச்சீர் உரமிடுதல்: விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
-
கோழிப்பண்ணையில் தவறி விழுந்தவர் பலி
-
தமிழ் பிராமியில் 41 செவ்விலக்கியங்கள் உலக சாதனை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
-
சட்டம் ஒழுங்கு சீர்கேடை கண்டித்து தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
-
இன்று குரூப்-2, 2ஏ தேர்வு 14,199 தேர்வர்கள் தயார்