அமைப்பு சாரா தொழிலார்களுக்கு மருத்துவ காப்பீடு: காங்., வைத்திலிங்கம் கோரிக்கை

புதுச்சேரி: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்தார்.

அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டசபை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேசியதாவது:

கட்டட தொழிலாளர்களுக்கு, அரசு சொந்தப் பணம் கொடுப்பத்தில்லை. வீடு கட்டுபவர்கள், பர்மிஷன் வாங்க போனா அதில் ஒரு தொகையை அரசிற்கு செலுத்த வேண்டும். அந்த தொகையை எடுத்து நலவாரியம் மூலம் கட்டட தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்க விண்ணப்ப படிவம் கேட்டால் கொடுக்கவில்லை. அவர்கள் 27 ஆயிரம் பேருக்கு மேல் சேர்க்க கூடாது என, சீலிங் வைத்துள்ளனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. உறுப்பனராக உள்ள 27 ஆயிரம் பேருக்காவது மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்.

தொழிலாளர் துறைக்கு நிதி ஒதுக்குவதில்லை. நீங்கள் வைத்துள்ள கோரிக்கை நிச்சயமாக வெற்றி பெறும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு வாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலார்களுக்கு தீபாவளி உதவித் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். பி.ஆர்.டி.சி., உள்ளிட்ட கூட்டுறவு மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement