மாம்பாக்கம் – பொன்மார் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

திருப்போரூர்: குறுகலாக உள்ள மாம்பாக்கம் – பொன்மார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம்- – பொன்மார் இடையே, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

இச்சாலை வழியாக பள்ளி மாணவ - – மாணவியர், வேலைக்கு செல்வோர் என, தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். மாம்பாக்கம்- – பொன்மார்

இடையேயான சாலை குறுகலாக இருப்பதால்,

வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் சாலையை கடந்து செல்ல திணறுகின்றன. தவிர, குடிநீர் திட்டத்திற்காக சாலையோரம் பள்ளம் தோண்டி குழாய் புதைத்த இடங்கள் கரடுமுரடாக உள்ளன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் கடக்கின்றனர்.

எனவே, மாம்பாக்கம் - – பொன்மார் சாலையை சீரமைத்து அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement