வங்கி கடன் (Tag) பெண் தொழில்முனைவோருக்கு 50 % சலுகை
வங்கி: பேங்க் ஆப் பரோடா
திட்டம்: பரோடா மகிளா சுவாவலம்பன்
புதிதாக தொழில் தொடங்க வேண்டும்; நடத்தி வரும் தொழிலை விரிவுபடுத்த வேண்டும்; மூலப்பொருட்கள் வாங்க பணம் தேவைப்படுகிறது... இத்தகைய தேவைகளுக்காக பெண் தொழில்முனைவோருக்கு பேங்க் ஆப் பரோடா சிறப்பு கடன் வசதியை வழங்குகிறது.
யாருக்கான திட்டம்?
பெண்களுக்கு சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம். கூட்டு நிறுவனங்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 51 சதவீத உரிமை இருக்க வேண்டும். உத்யம், ஜி.எஸ்.டி., பதிவு உள்ளிட்ட தகுதிகள் பொருந்தும்.
சொந்தமாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை விரிவுபடுத்தவும் விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு, பேங்க் ஆப் பரோடா வங்கி சிறப்பு கடன் வசதி வழங்குகிறது.
எந்த தேவைகளுக்கு கடன்?
தொழில் தொடங்க: புதிய தொழில் நிறுவனத்துக்கு தேவையான முதலீடு.
தொழிலை விரிவுபடுத்த: இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குதல்.
தொழிலை நடத்த: மூலப்பொருள் கொள்முதல் உள்ளிட்ட நடைமுறை மூலதன தேவைகள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தொழில் பதிவு ஆவணங்கள், நிதி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள பேங்க் ஆப் பரோடா கிளையை அணுகலாம்.
இணையதளம்: bankofbaroda.bank.in
கவனிக்க:
50 சதவீத சலுகை கடன் பரிசீலனை கட்டணத்துக்கு மட்டுமே. வட்டி, கடன் தொகை, பிணைய விலக்கு ஆகியவை வங்கியின் தகுதி மதிப்பீட்டுக்கு உட்பட்டவை.
@block_B@
வசதி விபரம்
கடன் பரிசீலனை கட்டணம் 50% சலுகை
தொடக்க ஆண்டு வட்டி 7.90% முதல்
திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள்
சொத்து பிணையம் தகுதி மற்றும் உத்தரவாத விதிகளுக்கு உட்பட்டு விலக்குblock_B