முதலமைச்சர் கோப்பை வாலிபால் போட்டி
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாலிபால் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தங்கம் வென்ற அணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி திருவண்ணாமலையில் கடந்த 18ம் தேதி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் சார்பில் வாலிபால் போட்டியில் 16 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் தங்கம் வென்ற அணிக்கு 12 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அணியில் பங்கேற்ற முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிரவீன்குமார், 16; ஹரிஷ், 16; பங்கேற்றனர்.
இரண்டு மாணவர்களையும் பள்ளி தாளாளர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உதவிதலைமை ஆசிரியர் ஜேக்கப் ஜீவானந்தம், பயிற்சியாளர் சீத்தாராமன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் ஆசிரியர்கள் பிரேம், ராஜ்குமார், விமல் பாராட்டினர்.