மாவட்ட கபடி போட்டியில் மாணவிகள் முதலிடம்

விக்கிரவாண்டி: மாவட்ட அளவிலான கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி கூட்டேரிப்பட்டு அடுத்த சின்ன நெற்குணத்தில் தனியார் பள்ளியில் நடந்தது. அதில் விக்கிரவாண்டி அடுத்த எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்தனர்.

இவர்கள் அடுத்த மாதம் மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணசாமி, மேலாண்மைக் குழு தலைவி சரண்யா, ஆசிரியர் வெற்றிவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதாஸ், கோகுல ராஜன் மற்றும் பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement