கேரளாவில் நவ.3 முதல் தனியார் பஸ்கள் ஸ்டிரைக்
கம்பம்: கேரளாவில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நவ.3 முதல் தனியார் பஸ்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் விடியல் பயணம் என்ற பெயரில் குறிப்பிட்ட சில டவுன் பஸ்களில் மட்டும் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது த.வெ.க. ஆட்சியில் விடியல் பயணம் வெற்றி பயணமாக மாற்றி தொலை தூர பஸ்களிலும் பெண்கள் இலவசமாக செல்ல அனுமதி வழங்கி உள்ளனர்.
இதே போல கேரளா வாசம் பிரியதர்ஷினி என்ற பெயரில் இலவசமாக பெண்கள் அரசு பஸ்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் அங்குள்ள தனியார் பஸ்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் குறைந்த கட்டணம் ரூ.15 என நிர்ணயிக்கவும், பள்ளி மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ஒரு ரூபாய் என்பதை ரூ.5 ஆக உயர்த்த வலியுறுத்தி வரும் நவ 3 முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. கேரளாவில் உள்ள ஆறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கேரளாவில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்