அ. தொட்டியங்குளத்திற்கு பள்ளி நேரத்தில் பஸ் இயக்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பாப்பனம், வி. நாங்கூர் வழியாக அ.தொட்டியங்குளத்திற்கு பள்ளி நேரத்தில் பஸ் இயக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலும் காலையில் பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு சில ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பஸ் இயக்கப்படுவதால் மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் அ. தொட்டியங்குளத்திலிருந்து பாப்பனம், வி. நாங்கூர் வழியாக பஸ் இயக்கப்படுகிறது. காலையில் பள்ளி நேரத்தில் பஸ் இருப்பதால் மாணவர்கள் எளிதில் வர முடிகிறது. மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் பஸ் இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகின்றன. அதுவரை மாணவர்கள் காத்திருப்பதால் படிப்பு வீணாகிறது. இதனை கருத்தில் கொண்டு காரியாபட்டியில் இருந்து மாலை 4: 30 மணிக்கு பாப்பனம், வி. நாங்கூர் வழியாக அ.தொட்டியங்குளத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement