மழைநீர் வழிந்தோடும் வகையில் சாலைகளை சீரமைப்பது அவசியம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி
சென்னை: சென்னையில், சாலை சீரமைப்பு பணிகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன், மண்டல அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* சாலை சீரமைப்புக்கு முன், பழைய சாலையின் தார் அடுக்குகளை இயந்திரம் வாயிலாக அகற்ற வேண்டும். அடுத்தடுத்து தார் அடுக்குகளை அமைத்து, சாலையின் உயரத்தை அதிகரித்தல் கூடாது
* சாலையின் தற்போதைய நிலை, உயரம், வடிகால் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகள் முடிந்ததும் சாலையின் மேற்பரப்பு மேடு, பள்ளங்கள் இன்றி சீராக இருக்க வேண்டும். மழைநீர் முறையாக வழிந்தோடும் வகையில், சாலையை அமைக்க வேண்டும்
* தார் பூச்சு போடும்முன் கற்கள், மணல் துகள்களை இயந்திரம் வாயிலாக அகற்ற வேண்டும். புதிய தார் சாலையின் தடிமனுக்கு ஏற்ப, பழைய தார் அடுக்குகளை அகற்ற வேண்டும். பொருத்தமான அரவை இயந்திரங்களை பயன்படுத்தி, தேவையான ஆழம் மற்றும் அகலத்தில் சாலையை சீரமைக்க வேண்டும்
* நடைபாதைகள் சேதமடையாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தார் கலவை போடும்முன், அதன் ஆழம் மற்றும் அளவை பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள், நடைபாதைகளை புதிய சாலை மட்டத்திற்கு ஏற்ப அமைக்க வேண்டும்
* சீரமைக்கப்படும் சாலைகளின் புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சாலை சீரமைப்புக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்