3 பேருக்கு பிடி வாரண்ட்

போடி: போடியில் பல்வேறு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர்கள் மீண்டும் நீதிமன்றத் தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இதில் கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் அலி, போடி சங்கராபுரம் கிழக்கு தெரு பாலமுருகன், தஞ்சாவூர் அருகே மன்னார்குடி அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் குமார், ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. போடி தாலுகா போலீசார் தேடி வருகி ன்றனர்.

Advertisement