‘நானும் ரவுடி தான் நிர்மல்குமார்’ தினகரன் கிண்டல்
சென்னை: நானும் ரவுடி தான் என்பது போல, அனைத்து பிரச்னைகளிலும் அமைச்சர் நிர்மல்குமார் மூக்கை நுழைப்பதாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அனைத்து தரப்பு மக்களின் அன்றாட தேவையான மின்சாரத்தை தடையின்றி வினியோகம் செய்ய வேண்டிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், ‘நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்’ என்ற நகைச்சுவை காட்சிகளுக்கு ஏற்ப, அனைத்து பிரச்னைகளிலும் தாமாக முன்வந்து மூக்கை நுழைத்து, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறார்.
‘கவனக்குறைவாகச் செயல்படுவோர் மீது, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதல்வர் விஜய் கூறுகிறார். ஐந்து மாதங்களாக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியும், தனது நிர்வாகத் திறனற்ற செயல்பாட்டால் மின் வாரியத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளிய அமைச்சர் நிர்மல்குமார் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மக்களுக்குத் தேவை தடையற்ற மின்சாரமே தவிர, அற்பக் காரணங்கள் அல்ல. இதை உணர்ந்து, தமிழகத்தில் சீரான மின் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்