அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

கடலுார்: பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலுாரில் முழுநாள் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான நடவடிக்கைைய துரிதப்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் முறையான காலமுறை ஊதியம் வழங்கி அனைத்து பலன்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் முழுநாள் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பொற்செழியன் வரவேற்றார். காந்தி, லெனின், பிரகாஷ், பாபு, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம் பிள்ளை, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.

மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement