சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, சிறப்பாக பணியாற்றிய தனது ஊழியருக்கு லம்போர்கினி உருஸ் காரை பரிசாக வழங்கினார்.
நடாலியா சாவேஸ் என்ற பெண் ஊழியர் இரண்டு ஆண்டுகளில் 500 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ.47 ஆயிரம் கோடி) அளவுக்கு நில விற்பனைக்கு காரணமாக இருந்தார். நிறுவனத்தின் ஆண்டு விழாவின் போது, அவரை பாராட்டி கோப்பை பெற மேடைக்கு வருமாறு சிஇஓ அழைத்தார்.
நடாலியா மேடை சென்று கோப்பையை பெற்றுக் கொண்டு திரும்பும் போது, அவரை நிறுத்திய சிஇஓ லம்போர்கினி உர்ஸ் காரை பரிசு வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.
இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.2 .3 கோடி முதல் 4 கோடி வரை விலை கொண்டது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்த அரசு செயலி உருவாக்க வேண்டும்: தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
-
என் ராஜினாமா பின்னணி பற்றி அவதுாறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: ‘மாஜி’ மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை
-
கஞ்சா விற்ற வாலிபர் கைது
-
மின் கம்பம் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி
-
மகளிர் திட்ட முன்னேற்றம் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
-
முதலுதவி உயிர்காக்கும் பயிற்சி
Advertisement
Advertisement