ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் கரிக்குப்பம் ஐ.எல் அண்ட் எப். எஸ்., பவர் கம்பெனி, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை, கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் மற்றும் பொதுமருத்துவ முகாம் நடந்தது.

முகாமிற்கு ஐ.எல் அண்ட் எப். எஸ்., நிலைய அதிகாரி குகன் தலைமை தாங்கினார். பொதுமேலாளர்கள் இளவரசன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவர் மதுக்கரொட்டி குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் கண்நோய், கண்புரை நீக்குதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், குழந்தைகள் நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோதண்டபாணி அறக்கட்டளை தலைவர் துரை ராமலிங்கம், தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், செல்வி, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், அன்புமணி, பாலா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை மகேஷ்குமார் செய்தார்.

Advertisement