நாய் குரைத்ததால் தகராறு: 6 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி: நாய் குறைத்ததால் இரு தரப்பினர் இடையே நடந்த தகராறில், போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மணிமேகலை, 41; இவரது வீட்டின் அருகே வசிப்பவர் மனோஜ்குமார், 31; நேற்று (அக்.,27) மணிமேகலை வீட்டில் நாய் குரைத்தது தொடர்பாக மனோஜ்குமார், மணிமேகலையை ஆபாசமாக திட்டி உள்ளார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த மணிமேகலை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து இருதரப்பும் தனித்தனியாக குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மனோஜ் குமார், குமாரி, மணிகண்டன், மணிமேகலை உள்ளிட்ட, 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement