தம்பி மனைவியை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கோவை: மதுக்கரை, சீராப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். மனைவி புவனா மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள பூர்வீக வீட்டில் வசித்து வந்தனர். விஜயகுமாரின் மூத்த சகோதரர் சுகுணாகுமார்,54 தனக்கு வீட்டில் பங்கு இருப்பதால் காலி செய்யுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், 2020 அக்.13ல் விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், புவனாவிடம் சுகுணா குமார் தகராறு செய்தார். புவனாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த புவனா தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

மதுக்கரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து சுகுணாகுமாரை கைது செய்தனர். அவர் மீது கோவை சி.ஜே.எம். கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி சிவகுமார் குற்றம் சாட்டப்பட்ட சுகுணாகுமாருக்கு, 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ராமன் ஆஜரானார்.

Advertisement