சென்னை பல்கலை எஸ்.சி., – எஸ்.டி., குறைதீர் கூட்டம் பதிவாளர் விசாரணைக்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னை பல்கலை எஸ்.சி., – எஸ்.டி., குறைதீர் கூட்டத்தில், புகார்கள் மீது பதிவாளர் விசாரணை நடத்த பேராசிரியர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்கலை மானியக்குழு எனும் யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, பல்கலையில் படிக்கும் எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களின் புகார்களைத் தீர்க்கவும் குறைதீர் குழு செயல்படுகிறது. இக்குழு ஆண்டுக்கு நான்கு முறை கூடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும்.
அதன்படி, சென்னை பல்கலை வளாகத்தில், எஸ்.சி., – எஸ்.டி., குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட புகார்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எஸ்.சி., – எஸ்.டி., புகார்கள் தொடர்பாக பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் விசாரணை நடத்தக் கூடாது என, சில பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை பல்கலை தொடர்பாக, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன; பதிவாளர் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தேசிய ஆணையம் சில மாதங்களுக்கு முன் பல்கலை வளாகத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியது. இதைச் சுட்டிக்காட்டி, குறைதீர் கூட்டத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்