மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150ஐ தொட்டது
தொடர் மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை மார்க்கெட்டுகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாயை தொட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் 2023-ம் ஆண்டில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு 150 முதல் 170 ரூபாய் வரை சென்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது மைசூருவில் இருந்து வெங்காய வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயம் மட்டுமின்றி தக்காளி, கொத்தமல்லி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
-
450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்
-
த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தனியார் வசமாகிறதா 'டாஸ்மாக்': பரிசீலனை செய்கிறோம் என்கிறார் அமைச்சர்
Advertisement
Advertisement