தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
தேனி மாவட்ட சிறையில் உள்ள கைதிகள் துன்புறுத்தப்பட்டனரா என விசாரித்து, வரும் 16 ம் தேதி அறிக்கை அளிக்கும்படி, தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறையில் இருந்து, அக்.,26ம் தேதி இரவு, 17 கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு, கடலுார், மதுரை சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தப்பிய கைதிகளில் ஒருவர், தங்களுக்கு சிறையில், முறையாக உணவு, குடிநீர் வசதிகள் வழங்கப்படாததாலும், துன்புறுத்தியதாலும், தப்பிச் சென்றதாக, வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, தேனி மாவட்ட சிறையில் 17 கைதிகள் துன்புறுத்தப்பட்டனரா என விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தேனி மாவட்டத் தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரான, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, 'கடலுார், மதுரை, சேலம் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 17 கைதிகளை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில், ஒவ்வொருவரிடமும் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க வேண்டும்.
அவர்களின் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பதை சரி பார்த்து, நவ., 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கடலுார், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுக்களின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; மது பிரியர்கள் திண்டாட்டம்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு