கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது

1

ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த ராகவன் (25) மீது தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கர்நாடகாவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ராகவனை, கோவை மத்திய சிறையில் இருந்து ஜூன் மாதம் போலீசார் அழைத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்து வரும் வழியில் அன்னூர் அருகே ராகவன் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றான்.அக்.30ம் தேதி சிக்கிய அவனை, அன்றே அன்னூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திவிட்டு,நள்ளிரவு கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

சிறை வளாகத்தின் முதல் வாயிலை கடந்தவுடன் ராகவன் கைவிலங்கை போலீசார் அகற்றினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அவனும், அங்கிருந்து தப்பினான். கைதி தப்பிய சம்பவத்தில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படையினரின் தீவிர வேட்டையில் ராகவன் சிக்கினான். அவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement