தனியார் வசமாகிறதா 'டாஸ்மாக்': பரிசீலனை செய்கிறோம் என்கிறார் அமைச்சர்
கோவையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி:
கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என, கடந்த ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியதே தற்போதைய பிரச்னைக்கு காரணம்.
காலி மதுபாட்டில்களை ஊழியர்கள் முறையாக கையாண்டதாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு காலி பாட்டில்கள் திரும்ப வரவில்லை. இதைத்தான் அரசு கேள்வி கேட்கிறது.
பாட்டில்கள் வரவு வைக்கப்பட்ட அளவு, பணம் வரவில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல், காலி மதுபாட்டில் விவகாரம் தான். பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையை வெளிப்படையாகவும், முறையாகவும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் காலி பாட்டில்களை ஒப்படைக்கும் நடைமுறை இன்னும், 20 நாட்களில் அமல்படுத்தப்படும். இதற்காக, 40 ஆயிரத்து 48 இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடை ஊழியர்களுக்கு, 34 ஆயிரம் ரூபாய் சம்பளம், வார விடுமுறை, மருத்துவ காப்பீடு, பண்டிகை காலங்களில், 20 ஆயிரம் ரூபாய் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடைகளில் பணிபுரிவோர் மட்டும் சீருடை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
இதுவரை, 960 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடையை மூட சொல்லிய நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடைகளை மூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடக்கிறது. கடைகளில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். மாற்று பணியாளர்களை நியமித்து கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியாரிடம் கொடுத்தால் கலர் கலந்து கள்ள சாராயம் தான் ஓடும்? டாஸ்மாக்கை ஏமாற்றி விடுவார்கள்?
டாஸ்மாக்காரர்கள் எல்லா இடத்திலும் அடாவடி தான்! ஏன் என்றால் பாட்டிலுக்கு ₹10 அதிகமாக இவர்களுக்கு கிடைத்தது போச்சு? அதனால் ரவுடிகள் போல் இவர்கள் நடவடிக்கை இருக்கிறது?
மிகவும் நல்லது. போதை வஸ்த்துக்களை அரசாங்கம் நடத்துவது மிகப்பெரிய தவறு. இது அரசாங்கம் சூதாட்ட கிளப் நடத்துவதற்கு சமம். தனியார் மயமாக்கியபின் பின் அரசாங்கம் அதில் தலையிடக் கூடாது. படிப்படியாக கடைகளை குறைக்க வேண்டும். ஐந்து வரடங்களுக்குள் போதையில்லாத தமிழகமாக மாறவேண்டும். பணம் இருப்பவர்கள் குடிப்பதால் அவர்கள் குடும்பம் அழியாது. தினமும் ஆயிரம் ஐநூறு கூலி வாங்குபவர்கள் குடிப்பதால் அந்த குடும்பம் படும் வேதனை சொல்லி மாளாது. முதல்வர் விஜய் இதை செய்தால் தமிழக மக்களால் எம்ஜிஆரை போல் போற்றப்படுவார்.மேலும்
-
கபடி சங்க நிர்வாக தேர்தல் முறையாக நடத்தக்கோரி மனு
-
ஏ.கே.வி., பள்ளியில் கல்வி கண்காட்சி
-
ஆரி வேலைப்பாடு பயிற்சி நிறைவு பழங்குடி பெண்களுக்கு சான்றிதழ்
-
எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு அமைச்சர் வெள்ளை அங்கி வழங்கல்
-
மண் குவியலில் புதர் பொதுமக்கள் அச்சம்
-
நாமக்கல் தோட்டக்கலைத்துறை சார்பில் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி