மாற்றுத்திறனாளிகளுக்கு125 நாள் பணி வழங்க அதிகாரிகள் மறுப்பு

திருத்தணி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 125 நாள் பணி வழங்க அதிகாரிகள் மறுப்பதாக, மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவலாங்காடு ஒன்றியம், நாபளூர் ஊராட்சிக்குட்பட்டது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணியாளர்கள் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், நான்கு பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

அவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:

கடந்த, 2025 – 26ம் ஆண்டு, நுாறு நாள் பணி நடந்த போது, கோடை வெயில் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கவில்லை. அப்போது, வெயிலில் நீண்ட தூரம் சென்று உங்களால் வேலை செய்ய முடியாது என, ஒன்றிய அதிகாரிகள் காரணம் கூறினர்.

தற்போது, குன்னத்துார் கிராமம் அருகே, குளம் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்காமல், ஒன்றிய அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால், பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்க முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement