பள்ளி நேரத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்: அன்பழகன்

அன்பழகன் படம்

புதுச்சேரி: பள்ளி நேரத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கல்வித்துறை இயக்குநரிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசாணைப்படி பள்ளிகள் காலை 9:15 முதல் மாலை 4:20 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஆனால், உப்பளம் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை 8:00 மணிக்கு முன்பே தொடங்கி இரவு 7:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமும் 11 மணி நேரத்திற்கும் மேலாக வகுப்பறையிலேயே அடைபட்டுக் கிடப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், 15 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இரவு 7 மணிக்கு மேல் வீடு திரும்புவது அவர்களின் பாதுகாப்பிற்குப் அச்சுறுத்தலாக அமைகிறது.

பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தைக் அனைத்துப் பள்ளிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement