பாதிக்கப்பட்ட நபரிடமே ‘ஆட்டை’ கான்ஸ்டபிள் ‘சஸ்பெண்ட்’
நாகப்பட்டினம்: நாகையில், நகையை பறிகொடுத்த தம்பதியிடம், நகைகளை மீட்டுத் தருவதாக, ஜி பே செயலி மூலம் பணம் வாங்கிய போலீஸ்காரரை, சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
நாகை அடுத்த வேளாங்கண்ணியை சேர்ந்தவர் சண்முகராஜ், 31. மீனவர். கடந்த பிப்ரவரி 4 ம் தேதி, இவரது வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகளை, பீரோவை உடைத்து மாம நபர்கள் திருடிச் சென்றதாக, சண்முகராஜ் மனைவி சுகன்யா, 21, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கின் நிலையறிய கடந்த 21ம் தேதி, சண்முகராஜ், வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மதன்சுந்தர் என்ற போலீஸ்காரர், நகைகளை மீட்டுத் தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் தன்னிடம் வேறொரு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 10 சவரன் நகை இருப்பதாகவும், 50 ஆயிரம் ரூபாய் தந்தால் நகைகள் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து 3 தவணைகளாக, ஜிபே செயலி மூலம் 42500 ரூபாய் சண்முகராஜ் கொடுத்துள்ளார். மதன் சுந்தர் நகைகள் தராததால், சண்முகராஜ் போலீஸ் ஸ்டேஷன் சென்று பணத்தை கேட்டுள்ளார். இதையடுத்து கான்ஸ்டபிள் மதன் சுந்தர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
இத்தகவல் எஸ்.பி., சுப்பிரமண்ய பாலச்சந்திராவுக்கு தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட கான்ஸ்டபிள் மதன் சுந்தரை, சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.
தமிழ் நாட்டில் ஊழல் செய்லதில ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த சம்பவம் உணர்த்துகுறது.மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்