மனிதனுக்கு ஒரே வாழ்க்கை தான்; இரட்டை ஆயுள் முரண்பாடானது: சுப்ரீம் கோர்ட் கருத்து
- சிறப்பு நிருபர் -
மஹாராஷ்டிராவில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைதான நபருக்கு விசாரணை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி அமர்வு விரிவாக விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனிதர்களுக்கு இருப்பது ஒரே வாழ்க்கை தான். அந்த வகையில் ஒரு குற்றவாளி இரண்டு முறை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தண்டனை விதிப்பது முரண்பாடானது; பகுத்தறிவற்றது.
இருவேறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க முடியாது. எனினும் இருவேறு வழக்குகளையும் பொருத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம், ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை குறைப்பு, மற்றொரு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையின் தாக்கத்தை நிச்சயம் குறைத்துவிடாது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இருப்பதோ ஒரு ஆயுள். எதுக்கு ஜெயில்ல போட்டுக்கிட்டு. இருக்கிற வரை ஜாலியா வெளியே இருக்கட்டும் உட்ருங்க யுவர் ஆனர்.
ஆயுள் தண்டனை அளிக்கக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களை செய்திருந்தால் இரட்டை ஆயுள் தண்டனை அளிப்பது வழக்கம். ஒரு குற்றத்திற்கு அரசால் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் அல்லது மேல்முறையீட் டில் ஒன்றில் விடுதலை செய்யப்பட்டாலும் மற்றொரு ஆயுள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். ( இதெற்கெல்லாம் ஓசிச்சோறு போடுறதுக்கு பதில் கைதியின் சொத்துக்களை ஏலம் விட்டு அதிலிருந்து சோறு போடலாம்)
ஒரு குற்றவாளி இரண்டு முறை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தண்டனை விதிப்பது முரண்பாடானது பகுத்தறிவற்றது.
பகுத்தறிவு பல்லிளித்த தருணம்.
அது இதனை யுகங்கள் ஆன பிறகுதான் தெரிந்ததா யுவர் ஹானர் .
நான் சென்னை இருந்து கோயம்புத்தூருக்கு பைக்பில் போகும் பயணம் ஒரே பயணம் தான் ஆபிசர், ஆனால் தலைக்கு Helmet போடாவிட்டால் பிடிபடும் எல்லா இடத்திலும் தண்டனை கட்டணம் செலுத்தியாக வேண்டும், இது மட்டும் நீதிமன்றங்கள் தான் ஏற்றுகொள்கின்றன , இது எப்படி ஆபிசர்?
ஒரு குற்றவாளிக்கு நிரந்தரமா ஜாமீன் கொடுப்பது முரண்பாடு இல்லாயா ஆபீசர்? ஒரே கேஸுக்கு 40 வருடம் வாதாடுவது கேவலமில்லையா ஆப்பீசர்? அரசியலவியாதிகள் மற்றும் பணமுதலைகள் வழக்கு வருட கணக்கா முறையீடு மேல் முறையீடு இடைக்கால தடை எல்லாம் வாரி வழங்குறீங்களே அது எல்லாம் சரியா ஆபீசர்?
இந்த கோர்டுகள்தான் நாட்டை நாசம் செய்துகொண்டிருக்கிறது , உப்புச்சப்பு இல்லாத ஆர்குமெண்டைவைத்து ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை செய்து குற்றவாளிகளை தொடர்ந்து காப்பாற்றிவருகிறது ... நம் அரசியலமைப்பு சட்டத்தை ஊழலுக்கு எதிராக சீனாவில் உள்ளதுபோல் மாற்றிஅமைக்கவேண்டும்
இப்போதாவது முடிந்ததே. இந்த கேளிகூத்து இத்தனை வருடங்கள் இருந்தன
மேலும் ஆயுள் தண்டனை என்பது, குற்றவாளி சாகும் வரை ஜெயில்ல இருப்பதா, அல்லது 14 வருங்களா என்பதையும் நீதி மன்றமே தீர்மானிக்கலாமே ? சாகும்வரை என்றால், அவன் ஆயுட்காலம் முழுவதும் உள்ளேயே இருக்க வேண்டிய கடுமையான குற்றங்கள் பலர் உயிரை பறித்தல், இளம் சிறார்களை கூட பால் இயல் குற்றம் புரிந்து கொல்வது , தேச நலனுக்கு எதிராக செயல் படுவது போன்றவை புரிந்திருந்தால், எப்போதும் வெளியில் விடப்போவதில்லை என்றால், உதாரணத்திற்கு 40 வருடங்கள் உயிரோடிருந்தால் அவனை உள்ளேயே வைத்து பராமரிக்க மக்கள் வரிப்பணம், ஏன் செலவிடப்பட வேண்டும். கேப்பிடல் பனிஷ்மென்ட் தூக்கு தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பாக அமையும்.
இதுவரை எத்தனை ஆயுள் கைதிகளை சாவுற வரைக்கும் ஜெயில்ல வெச்சிருந்திங்க யுவர் ஆனர்? இதுல லாஜிக் வேறே.மேலும்
-
வசந்த நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதி
-
மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
-
மின்கம்பத்தில் மோதி கட்டட மேஸ்திரி பலி
-
மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி
-
ஆதி திராவிட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற நிதி ஒதுக்கீடு
-
விஜய் போலவே நடிகர் தனுஷுக்கும் 'ஜாக்பாட்' அடிக்கும் என நம்புகின்றனர்: பழனிசாமி கருத்து